நடனத்துக்கு புது வடிவம் கொடுத்தவர்
இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடன இயக்குனராக வலம் வரும் பிரபுதேவா, தனது துறையில் பல சாதனைகளை படைத்தவர். ஆடத்தெரியாத நடிகர்களை கூட அவர்களுக்கு ஏற்ற அசத்தலான நடன அமைப்பால் அவர்களை மிகவும் ரம்மியமாக ஆட வைத்தவர் இவர்.

சுந்தரம் மாஸ்டரின் மகனான பிரபு தேவா, 1980களில் இருந்து நடன இயக்குனராக பணியாற்றி வருபவர். இந்த நிலையில் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய முதல் திரைப்படம் குறித்து ஒரு அசத்தலான தகவல் வெளிவந்துள்ளது.
வேறு பெயரில் அறிமுகமான பிரபுதேவா
பிரபுதேவா நடன இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் “மைக்கேல், மதன, காம, ராஜன்”. இத்திரைப்படத்தில் அவரது பெயர் டைட்டில் கார்டில் பிரபுதேவா என்று இடம்பெற்றிருக்காது. மாறாக S.பிரபு என்றுதான் இடம்பெற்றிருக்கும். பின்னாளில்தான் தனது பெயரை அவர் பிரபுதேவா என்று மாற்றிக்கொண்டார்.
