இளம் இயக்குனர்கள்
“போர் தொழில்”, “லப்பர் பந்து” ஆகிய திரைப்படங்கள் சமீப காலங்களில் வெளிவந்த திரைப்படங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக அமைந்துள்ளது. இதில் “போர் தொழில்” திரைப்படத்தை விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியிருந்தார். “லப்பர் பந்து” திரைப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து இயக்கியிருந்தார். இந்த நிலையில் இந்த இரு இயக்குனர்களும் தனுஷை வைத்து தலா ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வலம் வருகின்றன.

எனினும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் விக்னேஷ் ராஜாவும் தமிழரசன் பச்சைமுத்துவும் தனுஷ் இயக்கியுள்ள “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்கள் என கூறப்படுகிறது.
இவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

இவ்விழாவில் இவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்களாம். அப்போது இந்த விழாவை ஒருங்கிணைத்த நிர்வாகி இவர்களை அடையாளம் தெரியாமல் “ரசிகர்களுக்கெல்லாம் பால்கனியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே செல்லுங்கள்” என கூறினாராம். அப்போது இன்னொருவர் ஓடி வந்து, “சார் இவங்க ரெண்டு பேரும் இயக்குனர்கள். ஒருவர் போர் தொழில் இயக்குனர், மற்றொருவர் லப்பர் பந்து இயக்குனர்” என அவரிடம் கூற, அதன் பிறகு இருவரும் முன் வரிசையில் அமர்ந்தார்களாம்.