தற்கொலை முயற்சி
நேற்று முன் தினம் பிரபல பாடகியான கல்பனா, ஹைதராபாத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துகொண்டதாக வெளிவந்த செய்தி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது கணவன் வெளியூர் சென்றிருந்த நிலையில் கல்பனா இரண்டு நாட்களாக தனது வீட்டை விட்டே வெளிவராமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது கல்பனா தூக்க மாத்திரைகள் உட்கொண்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்கொலை முயற்சி அல்ல…
இந்த நிலையில் கல்பனா குறித்து ஒரு முக்கிய செய்தி வெளிவந்துள்ளது. அதாவது “பாடகி கல்பனா தற்கொலை செய்துகொள்ள முயலவில்லை. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட அவர் ஒரே சமயத்தில் 18 தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் சுய நினைவை இழந்துள்ளார். தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கல்பனாவின் மகளான தயா பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.