இயக்குனராக களமிறங்கும் தயாரிப்பாளர்
சமீப காலமாக பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வரும் Dawn பிக்சர்ஸின் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் முதன்முதலாக இயக்குனராக களமிறங்கியுள்ள திரைப்படம் “இதயம் முரளி”. இத்திரைப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் “டிராகன்” பட புகழ் கயாது லோஹர், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.
மேலும் இவர்களுடன் நட்டி, நிஹாரிகா, இசையமைப்பாளர் தமன், ரக்சன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது.

கதாநாயகியாக அறிமுகமாகும் பாடகி
அதாவது “இதயம் முரளி” திரைப்படத்தில் பிரபல பாடகியான ஜோனிதா காந்தி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஜோனிதா காந்தி பாலிவுட்டில் பல திரைப்பட பாடல்களில் பின்னணி பாடியுள்ளார். தமிழை பொறுத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ், அனிருத், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலரது இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார்.

குறிப்பாக அனிருத்தின் இசையில் “அரபிக்குத்து”, “செல்லம்மா” போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் தற்போது “இதயம் முரளி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜோனிதா காந்தி நடிக்கவுள்ளாராம்.