புதுமை விரும்பி
தமிழ் சினிமாவில் வித்தியாசம், புதுமை போன்ற வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல திரைப்படங்களின் திரைக்கதையும் கதை சொல்லும் முறையும் மிகவும் தனித்துவமாகவும் புதுமையாகவும் இருக்கும்.

தனது முதல் திரைப்படமான “புதிய பாதை” திரைப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைச்சொல்லி என அறியப்பட்டவர் பார்த்திபன். அதன் பின் இவர் தொட்ட படைப்புகள் அனைத்திலும் தனது புதுமையை புகுத்திக்கொண்டே இருப்பவர்.
தனுஷிடம் கூறிய கதை…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் தான் தனுஷிற்கு ஒரு கதை கூறியது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். “நானும் தனுஷும் இணைந்து நடிப்பது போன்ற ஒரு கதையை தனுஷிடம் கூறினேன். ஆனால் தனுஷ் என்னை போன்ற சீனியர் இயக்குனரிடம் பணியாற்றுவதில் தயக்கம் காட்டினார். அவரது வயது ஒத்த இயக்குனரே சரியாக இருக்கும் என்று அவர் நினைத்தார்” என பார்த்திபன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.