வித்தியாசமான படைப்பாளி
ரா.பார்த்திபன் தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைச்சொல்லியாக உலா வருபவர். அவர் இயக்கி நடித்த பல திரைப்படங்கள் அவரது தனித்துவமான பாணியில் உருவானவை. பார்த்திபன் என்றாலே புதுமை என்ற வார்த்தைதான் பலருக்கும் நினைவில் வரும். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன் தனது திரைப்படத்தின் தோல்வியை குறித்து மிகவும் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார்.

என் குடும்பம் மட்டுந்தான் பார்த்தது…
1992 ஆம் ஆண்டு பார்த்திபனின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சுகமான சுமைகள்”. இத்திரைப்படத்தில் பார்த்திபன், ஷாலி, ராதா ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை பார்த்திபனே தயாரித்திருந்தார். இந்த நிலையில் அப்பேட்டியில் பேசிய பார்த்திபன், “சுகமான சுமைகள் எனது தாயாருடன் நான் எந்த மாதிரியான படங்களை பார்த்தேனோ அது போன்று ஒரு குடும்ப திரைப்படம்.

ஆனால் அந்த படம் படு ஊத்தல். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படத்தை என் குடும்பம் மட்டுந்தான் பார்த்தது. வேறு எந்த குடும்பமும் அந்த படத்தை பார்க்கவே இல்லை. அந்த நேரத்தில் எனக்கு ரூ.75 லட்சம் நஷ்டம். 75 லட்சமெல்லாம் நான் அன்று பார்த்தது கூட இல்லை” என்று தான் பட்ட கஷ்டத்தையும் நகைச்சுவையுடன் கூறினார்.