புதுமை விரும்பி
தமிழ் சினிமாவில் வித்தியாசமாக சிந்திப்பவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பார்த்திபன் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் இயக்கி நடித்த பல திரைப்படங்கள் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் ஆகும்.

சிறிய வசனம் என்றாலும் கூட அதனை மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் வெளிப்படுத்துபவர். அந்த வகையில் அவரது திரைப்படத்தின் 50 ஆவது நாள் போஸ்டரை மிகவும் வித்தியாசமான முறையில் நகைச்சுவை பாணியில் உருவாக்கிய சம்பவத்தை குறித்து தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் பார்த்திபன்.
வேற லெவல் Humour
1994 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி கதாநாயகனாக நடித்த திரைப்படம் “சரிகமபதனி”. இத்திரைப்படத்தில் ரோஜா, சங்கீதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த நிலையில் இத்திரைப்படம் வெளிவந்து 50 நாட்கள் ஓடியபோது “யப்பாடி, 50 ஆவது நாள்” என ஒரு போஸ்டரை வடிவமைத்தாராம். அந்த போஸ்டரை பார்த்து இயக்குனர் பாலச்சந்தரே பார்த்திபனுக்கு தொடர்புகொண்டு “இவ்வளவு Humour தாங்கவே தாங்காதுயா” என்று பாராட்டினாராம்.