பரிதாபங்களின் வளர்ச்சி…
யூட்யூப் யுகம் தொடங்கிய காலகட்டத்திலேயே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்கள் கோபியும் சுதாகரும். இவர்களால் தொடங்கப்பட்ட பரிதாபங்கள் யூட்யூப் சேன்னல் 59 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட சேன்னலாக வலம் வருகிறது. இவர்களின் நகைச்சுவை மிகவும் தனித்துவமானது. எளிய ரசிகர்களின் வாழ்வில் மிகவும் ஒன்றிப்போகக்கூடியவை. ஆதலால் இவர்களுக்கு பெருமளவு ஆதரவு இருக்கிறது.

புதிய படம்…
இந்த நிலையில் கோபி-சுதாகர் இணைந்து நடித்த ஒரு புதிய திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் ஒன்றை பரிதாபங்கள் குழு வெளியிட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு “Oh God Beautiful” என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தை விஷ்ணு விஜயன் என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை கோபி-சுதாகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.