SK 25
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பராசக்தி
இத்திரைப்படத்திற்கு “பராசக்தி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த டைட்டில் டீசரில் மாணவர்கள் போராட்டம் நடத்த தயாராகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த டைட்டில் டீசர் இதோ….