தமிழின் யதார்த்த இயக்குனர்
தமிழ் சினிமாவில் யதார்த்த கதைகளை கொண்டு திரைப்படம் உருவாக்குவதில் வல்லவராக திகழ்ந்து வருபவர் ராம். “கற்றது தமிழ்”, “தங்க மீன்கள்”, “தரமணி”, “பேரன்பு” போன்ற திரைப்படங்களை இயக்கிய ராம் தற்போது “ஏழு கடல் ஏழு மலை” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளிவரவுள்ளது. இதனிடையே ராம் இயக்கிய “பறந்து போ” என்ற திரைப்படம் உலக சினிமா விழா ஒன்றில் திரையிடப்பட்டுள்ளது.

பறந்து போ
ராம் இயக்கத்தில் உருவான “பறந்து போ” திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படம் நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டாம் உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த பல வெளிநாட்டவர்கள் இயக்குனர் ராமை பாராட்டினார்கள். இத்திரைப்பட விழாவில் பங்குபெற்ற “பறந்து போ” திரைப்படத்தின் படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
