வெற்றி இயக்குனர்
தொடக்க காலகட்டத்தில் இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணிபுரிந்த பாண்டியராஜன், “கன்னி ராசி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பதித்த பாண்டியராஜன், அதனை தொடர்ந்து “ஆண் பாவம்” என்ற திரைப்படத்தை நடித்து இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக உருமாறினார் பாண்டியராஜன். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் ஒரு நீங்கா இடத்தை பிடித்தார்.

ஆங்கில திரைப்படம்
சமீபத்தில் கூட ஹிப் ஹாப் ஆதியின் “PT Sir” திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் தோன்றினார் பாண்டியராஜன். இந்த நிலையில் பாண்டியராஜனை குறித்து ஒரு ஆச்சரியமான தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது பாண்டியராஜன் ஒரு ஆங்கில குறும்படத்தை இயக்கியுள்ளார். “Help” என்று பெயரிடப்பட்ட அக்குறும்படத்தில் டெல்லி கணேஷ், மோகன் ராம், தேவி பிரியா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் யூட்யூப் தளத்தில் காணக்கிடைக்கிறது.
