ரஜினிகாந்த்-கமல்ஹாசன்
1970களில் இருந்து 1980கள் வரை கிட்டத்தட்ட 16 திரைப்படங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு அளப்பரியது. இருவரும் இப்போதும் போட்டி நடிகர்களாக திகழ்ந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் நட்பு என்றைக்கும் குறைந்ததில்லை.

படையப்பா
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், “படையப்பா” திரைப்படத்தின் படப்பிடிப்பு நாட்கள் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “படையப்பா” திரைப்படத்தின் அனைத்து காட்சிகளையும் படமாக்கி பார்த்தபோது அதன் நீளம் மொத்தம் 4 மணி நேரம் வந்ததாம். இதனை பார்த்த ரஜினிகாந்த், “எந்த காட்சியையும் நாம் நீக்க வேண்டாம். 4 மணி நேரமாகவே படத்தின் நீளம் இருக்கட்டும். இரண்டு இன்டெர்வெல் விட்டுவிடலாம்” என கூறினாராம். கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஒன்றும் புரியவில்லை.

அதன் பின் ரஜினிகாந்த் இந்த விஷயத்தை கமல்ஹாசனிடம் கூற கமல்ஹாசனோ,”உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. 4 மணி நேரம்லாம் யாரும் படம் பாக்க மாட்டாங்க. நீங்கள் இதுல தலையிடாம இருங்க. கே.எஸ்.ரவிக்குமார் எடிட்டிங்க்லாம் பாத்துக்குவார்” என்று ரஜினியின் மேல் உள்ள நட்பின் உரிமையால் கொஞ்சம் கடுமையாகவே கூறியுள்ளார். ரஜினியும் அதன் பின் இதை பற்றி பேசவில்லை. கடைசியாக இத்திரைப்படத்தை எடிட் செய்து 3 மணிநேரம் 16 நிமிடங்களாக சுருக்கி வெளியிட்டனர். இத்திரைப்படம் ரஜினிகாந்தின் கெரியரில் மிக முக்கியமான வெற்றித் திரைப்படமாக அமைந்தது.