மனம் கவர்ந்த பாடலாசிரியர்
தமிழ் சினிமா இசை உலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர் பா.விஜய். இவர் “ஞாபகங்கள்”, “இளைஞன்” போன்ற பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் “Strawberry”, “ஆருத்ரா” போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது ஒரு புதிய ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அகத்தியா
ஜீவா, ராசி கண்ணா, அர்ஜூன், யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அகத்தியா”. இத்திரைப்படத்தை பா.விஜய் இயக்கியுள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த ஹாரர் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.