மனதை கவர்ந்த பாடலாசிரியர்
கவிஞர் பா.விஜய் தமிழ் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த பாடலாசிரியர் ஆவார். பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் காலத்தை தாண்டி நிற்கும் பல பாடல்களை அளித்த பா.விஜய், தமிழ் இசை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாசிரியராக திகழ்ந்து வருகிறார். இவர் பாடலாசிரியர் மட்டுமல்லாத “இளைஞன்”, “நையப்புடை” போன்ற பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும் “ஸ்ட்ராபெரி”, “ஆருத்ரா” ஆகிய திரைப்படங்கள் இவர் நடித்து இயக்கிய திரைப்படங்களாகும்.

பிரம்மாண்ட திரைப்படம்
இந்த நிலையில் பா.விஜய் தற்போது “அகத்தியா” என்ற பிரம்மாண்ட Mystery Thriller திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜீவா, அர்ஜூன், ராசி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் தொடக்கப்பட்ட நிலையில் இத்திரைப்படம் ஆங்கில திரைப்படத்திற்கு இணையான ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகிக்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது
