வலுவிழந்த வைகைப்புயல்…
வடிவேலு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகராக வலம் வந்தார். அவரது காமெடி காட்சிகள் இந்த உலகம் உள்ளவரை ரசிகர்களின் மத்தியில் ரசிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவராக அமைந்துள்ளார். எனினும் அவர் மீதான புகார்கள் காரணமாக அவருக்கு சில ஆண்டுகள் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மீண்டும் அவர் கதாநாயகனாகவும் முன்னணி கதாபாத்திரமாகவும் நடிக்கத் தொடங்கினார். இதில் அவர் கதாநாயகனாக நடித்த “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படம் தோல்வி திரைப்படமாக அமைந்தது.
எப்படி விலைக்கு வாங்குறது?…
வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து பகத் பாசிலும் வடிவேலுவும் “மாரீசன்” என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.

“மாரீசன்” திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். சுதீஷ் ஷங்கர் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை ஓடிடி நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்க படக்குழு முயற்சி செய்ய, ஆனால் ஓடிடி நிறுவனமோ வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தின் தோல்வியை சுட்டிக்காட்டி “மாரீசன்” திரைப்படத்தை அதிக விலைக்கு வாங்க மறுத்துள்ளதாம். இதனால் இத்திரைப்படத்தின் வெளியீடுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.