நடிகர் அஜித்தின் வளர்ச்சி:
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராகவும் டாப் அந்தஸ்திலிருந்து வரும் நடிகர் அஜித் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமையும். அந்த அளவுக்கு அவருக்கான ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள் .

எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்த அஜித் தொடர்ந்து தன்னுடைய முயற்சியாலும் தன்னுடைய திறமையாலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கான இடத்தை அசைக்க முடியாத அளவுக்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இந்த உச்சத்தை அடைய பல கஷ்டங்களையும் பல இன்னல்களையும் தாண்டி தான் வந்திருக்கிறார்.
ரஜினியிடம் வேதனையை கூறிய அஜித்:
அப்படி ஒரு சம்பவத்தை செய்யாறு பாலு சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார். அதாவது ஒரு பூஜை அந்த பூஜையில் அஜித்தும் கலந்துக்கொள்கிறார் ரஜினியும் கலந்துக்கொள்கிறார். என்ன டல்லா இருக்கீங்க? என்று அஜித்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்கிறார்.

உடனே அஜித்…. சார் நான் எல்லா படமும் நடிச்சு பாக்குறேன். ஆனால் எல்லாமே பிளாப் ஆகிடுது…. எதுவுமே ஓட மாட்டேங்குது. எனக்கு என்ன பண்றதுனே தெரியல என்று மனம் வருத்தத்துடன் கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்ல இல்ல நீங்க துவண்டு போகக்கூடாது.
எனக்கும் இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் நடந்திருக்கு. இதுக்கெல்லாம் சோர்ந்தே போகாதீங்க… இதுதான் சினிமா என்று ரஜினி அஜித்திற்கு அறிவுரை கூறியிருக்கிறார். அந்த சமயங்களில் ஜனா, ஜி உள்ளிட்ட படங்கள் பெரும் தோல்வி படங்களாக அஜித்துக்கு அமைந்தது.
வாழ்க்கையே திருப்பி போட்ட “பில்லா 2”:

உடனே ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தை சஜஸ்ட் செய்கிறார்… அதுதான் “பில்லா 2” . என்னோட பில்லா படத்தின் பார்ட் 2வில் நீங்கள் நடிங்க அது நிச்சயம் உங்களுக்கு வெற்றி கொடுக்கும் என்று கூறுகிறார் எப்போதுமே ரஜினி திடீரென சொல்லும் வார்த்தைக்கு பவர் அதிகம்.
குறிப்பாக ரஜினி ரசிகர்கள் அவரின் வாக்கை தெய்வ வாக்காக கருதுவார்கள். அப்படித்தான் ரஜினி சொல்லியதை அஜித் தெய்வவாக்காக எடுத்துக்கொண்டு பில்லா 2 திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிக்கொடுத்து.
அவரது சினிமா கெரியரையே திருப்பி போட்டது. இன்று வரை அஜித்தின் திரைப்படங்களில் பில்லா திரைப்படம் என்றால் தனி ஒரு மவுஸ் இருக்கத்தான் செய்கிறது. ரஜினிக்கு கூறிய அந்த ஒத்த சொல்லால் அஜித்தின் வாழ்க்கையே வேற மாதிரி மாறிடுச்சு என செய்யார் பாலு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.