உலகம் சுற்றும் அஜித்…
“விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு வெளிநாடுகளில் கார் ரேஸில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்குமார். இந்த நிலையில்தான் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படக்குழுவிற்கு ஒரு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளதாம்.

குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் “குட் பேட் அக்லி”. கார் ரேஸில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதற்காக இத்திரைப்படத்தில் தான் இடம்பெறும் காட்சிகளில் முழுமையாக நடித்துக்கொடுத்துவிட்டார் அஜித். தற்போது திரிஷாவை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

ஒரே ஒரு காட்சி பாக்கி…
இந்த நிலையில் அஜித் இன்னும் ஒரே ஒரு நாள் நடிக்க வேண்டிய காட்சி ஒன்று உள்ளதாக கூறப்படுகிறதாம். ஆனால் அஜித்குமார் இத்திரைப்படத்தில் தான் இடம்பெறும் அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டுத்தான் சென்றார் என்பதால் அவர் மீண்டும் ஒரு நாள் இத்திரைப்படத்திற்காக இந்தியா வந்து நடித்துக்கொடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.