தனுஷின் இட்லி கடை
தனுஷ் “ராயன்” திரைப்படத்தை இயக்கியதை தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ்,”இட்லி கடை” என்ற திரைப்படத்தை நடித்தும் இயக்கியும் வருகிறார். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இதில் அருண் விஜய், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இட்லி கடைக்கு வர மறுக்கும் நித்யா மேனன்?
இந்த நிலையில் நித்யா மேனனின் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியது உள்ளதாம். ஆனால் இதுவரை கொடுத்த கால்ஷீட் நாட்களில் சில நாட்களை நித்யா மேனனை வெறுமனே படப்பிடிப்பு தளத்தில் அமர வைத்துவிட்டு வீணடித்து விட்டார்களாம். இதனால் நித்யா மேனன் தனுஷ் மீது கோபத்தில் உள்ளாராம்.

படக்குழுவினர் மீண்டும் நித்யா மேனனின் கால்ஷீட் வேண்டும் என கேட்க, அதற்கு நித்யா மேனன் ஏதேதோ காரணங்களை சொல்லி தர மறுக்கிறாராம். இவ்வாறு ஒரு தகவல் சினிமா வட்டாரங்களில் உலா வருகிறது.