ஏமாற்றமடைந்த ரசிகர்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் சென்ற வாரம் வெளிவந்த “விடாமுயற்சி” திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது இத்திரைப்படம். வழக்கமான அஜித் திரைப்படம் இல்லை என்பதால் ரசிகர்களால் இத்திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை. ஆதலால் இத்திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது.

குட் பேட் அக்லி
“விடாமுயற்சி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் நடிக்க உள்ள திரைப்படம் குறித்து ஒரு ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது.
உலக சினிமா இயக்குனர்

அதாவது “மகாராஜா” திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் அஜித்திற்கு ஒரு ஒன்லைன் கூறியுள்ளாராம். “மகாராஜா” திரைப்படம் இந்தியா மட்டுமல்லாது சீனாவிலும் வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நித்திலன் சாமிநாதன் அஜித்திற்கு ஒரு ஒன்லைன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.