கீர்த்தி சுரேஷ்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் பிரபல தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமீப நாட்களாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

ஆனால், இதை உறுதிப்படுத்தாமல் கிசுகிசு செய்திகளாக இருந்து வந்த சமயத்தில் தற்போது கீர்த்தி சுரேஷ் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதாவது, இன்றைய தினம் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமணம் குறித்து அங்கேயே பேசி இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம்:
அதாவது தன்னுடைய அப்பா மற்றும் அம்மா உள்ளிட்டோருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த கீர்த்தி சுரேஷ் அடுத்த மாதம் தன்னுடைய படம் ரிலீஸ் ஆகியுள்ளதாகவும் மேலும் தன்னுடைய திருமணம் கோவாவில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் .

இதற்காகவே திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்ததாகவும் கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து கீர்த்தி சுரேஷ் திருமணம் தற்போது அவராலே உறுதி செய்யப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் பிரபல தொழிலதிபரான ஆண்டனி தட்டில் என கூறப்படுகிறது. இவர் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பல பிசினஸ்களை சொந்தமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அடுத்த செய்திகள் வெளியாகலாம்.