ரஜினி மகள் செய்த காரியம்!
கடந்த வருடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த “லால் சலாம்” திரைப்படம் மிகவும் சுமாரான திரைப்படமாக அமைந்தது. இதில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்திருந்தும் இத்திரைப்படம் சரியாக போகவில்லை. இத்திரைப்படம் லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது.

மீண்டும் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு சின்ன பட்ஜெட்டில் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக ஒரு தகவல் நேற்று வெளிவந்தது. இத்திரைப்படம் இரண்டு சிறுவர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்துடன் உருவாகும் திரைப்படம் எனவும் கூறப்பட்டது. இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.
ஆனால் தற்போதைய தகவலின் படி இத்திரைப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் ரஜினிகாந்தின் பொருளாதாரத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றனவாம்.