இயக்குனர் அவதாராம்
தனுஷ் தற்போது “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, “இட்லி கடை” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் தற்போது இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது.

இளம் தலைமுறையின் காதல்…
இத்திரைப்படம் இளம் தலைமுறையினரின் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த டிரைலரின் துவக்கத்தில் தோன்றும் தனுஷ், “இது ஒரு Usual ஆன் Love Storyதான்” என கூறுகிறார். அதே போல் இந்த டிரைலரின் முடிவில் தோன்றும் தனுஷ், “ஜாலியா வாங்க, ஜாலியா போங்க” என கூறுகிறார்.

இத்திரைப்படத்தில் பாவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், ரபியா, சித்தார்த் ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சரத்குமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் தனுஷ் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார்.