A Usual Love Story
தனுஷ் இயக்கத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உட்பட பல புது முகங்கள் நடித்துள்ள திரைப்படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”. இத்திரைப்படத்தை தனுஷே தயாரித்துள்ளார். வருகிற 21 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் துவக்க காட்சியில் தனுஷ் தோன்றி பார்வையாளர்களுக்கு இத்திரைப்படத்தை குறித்த முக்கிய விஷயத்தை கூறவுள்ளாராம்.

இது அப்படிப்பட்ட படம் கிடையாது…
அதாவது இத்திரைப்படத்தின் துவக்கத்திலோ அல்லது இத்திரைப்படத்தின் டிரைலரின் துவக்கத்திலோ “இத்திரைப்படம் ஒரு வழக்கமான காதல் திரைப்படம்தான்” என்பதை திரையில் தோன்றி பார்வையாளர்களுக்கு கூறுவது போன்று ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளாராம் தனுஷ். இத்திரைப்படத்தின் டிரைலர் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.