டிரெண்டிங் தம்பதியர்…
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் டிரெண்டிங் பிரபலங்களாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். இருவரும் இணைந்து வெளியிடும் பல புகைப்படங்கள் காண்பதற்கே கண்கோடி வேண்டும் என்பது போல் ரசிகர்களை கவர்ந்திழுக்க கூடியது. நடுவில் சில சில சர்ச்சைகளுக்கும் கேலிகளுக்கும் மத்தியில் இவர்களின் பெயர் அடிபட்டாலும் இவர்களை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை என்றும் குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

காதலர் தின வீடியோ…
நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர் “LIK” திரைப்படத்தில் இடம்பெற்ற “தீமா தீமா” பாடலுக்கு ரீல்ஸ் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் Cute என்று குறிப்பிட்டு இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
https://www.instagram.com/p/DGDtiU4Sitj
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து “LIK” திரைப்படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா “டெஸ்ட்”, “மண்ணாங்கட்டி”, “ராக்காயி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாது மலையாளத்தில் இரண்டு திரைப்படங்களிலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.