லேடி சூப்பர் ஸ்டார்:
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோயின் ஆன நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தமிழ், மலையாளம் , தெலுங்கு சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் கால் பதித்து அங்கும் நட்சத்திர ஹீரோயினாக பார்க்கப்பட்டு வருகிறார் .

இதனிடையே நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நயன்தாரா தனது திருமண வீடியோவை தன்னுடைய ஆவணப்படமாக வெளியிட்டு இருக்கிறார். இது அவரது பிறந்த நாள் தினத்தன்று வெளியானது.
நயன்தாராவின் ஆவணப்படம்:
இந்த ஆவண படத்தில் நயன்தாரா சினிமாவில் நுழைந்தது முதல் பல சர்ச்சைகளை சந்தித்தது வரை சினிமாவில் சாதித்து காட்டியது வரை விக்னேஷ் சிவன் உடனான காதல் திருமணம் என பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

அப்போது பேசிய நயன்தாரா தன்னுடைய முன்னாள் காதலர் ஆன பிரபுதேவா குறித்தும் இந்த தொடரில் பேசி இருப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டிருக்கிறது. இது குறித்த அவர் பேசியிருப்பது வாழ்க்கையில் தப்பு செய்தது சகஜம் தான். அதைப் பற்றி கவலைப்படுவதும் தப்பு இல்லை.
தினம் தினம் வேதனைப்படணும்:
ஒருவேளை வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் அந்த நபரை நான் நம்பாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கையில் சில வருஷங்களை நான் இழந்திருக்க மாட்டேன். ஒன்னு வாழ்க்கை போச்சு அப்படின்னு அழனும்.

அப்படி இல்லன்னா எழுந்து நிக்கணும். யாரெல்லாம் உங்கள மோசமா ட்ரீட் பண்ணாங்களோ ஒவ்வொரு நாளும் உங்களை பார்த்து உங்களோட வளர்ச்சியை பார்த்து உங்களுக்கு செஞ்ச மோசமான விஷயத்தை எண்ணி வருத்தப்படணும்.
பிரபு தேவா மீது இவ்வளவு வன்மமா:

தினம் தினம் உங்களுக்கு செய்த துரோகத்தை நினைத்து அவர்கள் வேதனை படனும் என நயன்தாரா பேசியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ் பலரும்… பிரபு தேவா உங்களை ஏமாத்துனது தப்புதான். அவரால் நீங்கள் சில ஆண்டுகளை இழந்தது தவறு தான்..பட வாய்ப்புகளை இழந்தது கஷ்டம் தான் ஆனால் இருந்தாலும் மன்னித்து விடலாமே. அதற்காக பிரபுதேவா மீது இவ்வளவு வன்மமா நயன்தாராவுக்கு? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.