லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா:
தமிழ் சினிமாவின் டாப் நடிகை என்ற நம்பர் ஒன் அந்தஸ்தில் இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் நடிகை நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார். கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார் .

அதை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்தார். இதனிடையே அவர் இளம் இயக்குனர் ஆன விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம்… குழந்தைகள்:
8 ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திரை நட்சத்திரங்கள் சூழ திருமணம் செய்து கொண்டார் . திருமணம் செய்து சில மாதங்களிலேயே வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

உயிர், உலக் என இரட்டை குழந்தைகளுடன் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்க்கை நகர்த்தி வரும் நடிகை நயன்தாரா அவ்வப்போது தனது மகனின் வீடியோ புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அவ FACE அட அட அடடா….
அந்த வகையில் தற்போது நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற பாடலை நயன்தாராவின் மகன்களான உயிர் மற்றும் உலக் இருவரும் சேர்ந்து பெட் ரூமில் பாடும் அழகான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த மழலை குரலில் உயிர் மற்றும் உலக் இருவரும் சேர்ந்து பாடும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் அவர்களுக்கு ஹார்டின் குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: