லேடி சூப்பர் ஸ்டார்
“ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்திற்குள் குடிபுகுந்த நயன்தாரா, அதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு மிளிர்கிறார். தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சமீப காலமாக நடிக்க தொடங்கியுள்ளார் நயன்தாரா.

சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு நான்…..
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ஊடகப் பேட்டியில் கலந்துகொண்ட நயன்தாரா, “லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்காக நான் அதிகளவில் விமர்சிக்கப்படுவதை என்னால் நம்பமுடியவில்லை. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே என்னுடைய திரைப்படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சேர்க்காதீர்கள் என பல தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் கெஞ்சி கேட்டு வருகிறேன். ஏனென்றால் எனக்கு பயமாக இருந்தது. என்னுடைய சினிமா கெரியருக்கு எந்த ஒரு பட்டமும் அவசியமில்லை.
அதே நேரத்தில் நான் யார் பட்டத்தையும் திருடவில்லை. மக்கள் என் மேல் வைத்திருக்கிற அன்பும் மரியாதையுமே இதற்கு காரணம். ஒரே இரவில் இந்த பட்டம் எனக்கு வந்தடையவில்லை. ரசிகர்களை நாம் ஏமாற்றமுடியாது” என அப்பேட்டியில் கூறியுள்ளார்.