நடிகை நயன்தாரா:
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்திலும் இருந்து வரும் நடிகை நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் மீது பகிரங்கமான குற்றச்சாட்டை ஒன்றை பதிவு செய்திருந்தார் .

அதாவது என்னுடைய திருமண வீடியோ வெளியிடுவதில் நடிகர் தனுஷ் பெரும் தொல்லை கொடுத்து வருவதாகவும் எங்களுடைய காதலின் அடையாளச் சின்னமாக பார்க்கப்படும் நானும் ரௌடி தான் திரைப்படத்தின் கிளிப்புக்காக கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் பணம் கேட்கிறார் என்று நயன்தாரா தனுஷ் மீது குற்றச்சாட்டை கூறியிருந்தார் .
வெடித்த சண்டை:
இது ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையுமே அதிர வைத்தது. இந்த விஷயம் நயன்தாரா மற்றும் தனுஷுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை வெட்ட வெளிச்சமாக்கியது. கிட்டத்தட்ட 9 வருடங்களாக தனுஷ் நயன்தாரா மீது கடுமையான கோபத்துடனும் வஞ்சத்துடனும் இருப்பதாகவும் நயன்தாரா அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

நேருக்கு நேர் சந்திப்பு:
இந்த நிலையில் இப்படியாக தனுஷ் மற்றும் நயன்தாராவின் விவகாரம் பெரும் சர்ச்சைக்குரிய செய்தியாக பார்க்கப்பட்டு வரும் சமயத்தில் சர்ச்சைகளுக்கு மத்தியில் நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் திருமணம் ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .

இந்த திருமணத்தில் திரை நட்சத்திர பிரபலங்களான சிவகார்த்திகேயன் நயன்தாரா விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

இந்த வீடியோவை பார்க்கும் போது நயன்தாரா தனுஷை பார்த்த உடனே கொஞ்சம் பயத்துடன் குறுகுறுன்னு பார்க்கிறார். ஆனால், தனுஷ் நயன்தாராவை பார்த்து எதுவுமே கண்டுக்காமல் செம கூலாக இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.