புஷ்பா 2 திரைப்படம்:
தெலுங்கு சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக இருந்து வரும் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது .
இதற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனுடையே இரண்டாம் பாகம் வெளியாக காத்திருக்கிறது .
அசிங்கப்படுத்திய நயன்தாரா:
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். புஷ்பா திரைப்படத்தின் மூலமாக அல்லு அர்ஜுன் தற்போது பான் இந்தியா நடிகராக மாறி இருக்கிறார். உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கும் அல்லு அர்ஜுன் சில வருடங்களுக்கு முன்னர் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகை நயன்தாராவுக்கு விருது வழங்க சிறப்பு விருந்தினராக அப்போது அழைக்கப்பட்டிருந்தார்

அப்போது அந்த விருதை அல்லு அர்ஜுன் கையால் நான் வாங்க விரும்பவில்லை. என்னுடைய காதலரான விக்னேஷ் சிவன் அதை கொடுக்கவேண்டும். அவரது கையால் வாங்க நான் விருப்பப்படுகிறேன் என்று தெரிவிக்க உடனே தொகுப்பாளர்கள் கீழே இருக்கையில் அமர்ந்திருந்த விக்னேஷ் அவனை மேடைக்கு அழைக்கிறார்.
அல்லு அர்ஜுன் கொடுத்த ஸ்லிப்பர் ஷாட்:

பின்னர் அல்லு அர்ஜுன் கையில் இருந்த விருதை விக்னேஷ் சிவன் வாங்கி நயன்தாராவுக்கு அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக நயன்தாரா அல்லு அர்ஜனை எவ்வளவு கேவலப்படுத்தி மேடையிலே அசிங்கப்படுத்தி இருக்கிறார்? என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். பல வருடங்கள் கழித்து அல்லு அர்ஜுன் பான் இந்தியா நடிகராக உருமாறி நயன்தாரா போன்ற பிரபலங்களுக்கு ஸ்லிப்பர் ஷார்ட் கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதோ அந்த வீடியோ: