நயன்தாரா தனுஷ் பிரச்சனை:
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தரத்தில் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக நானும் தினேஷ் சிவனும் காதலித்து வந்த சமயத்தில் நானும் ரௌடி தான் திரைப்படத்தின் கிளிப்பை பயன்படுத்துவதற்காக கிட்டத்தட்ட தனுஷ் 10 கோடி ரூபாய் வரை கேட்டு எங்களுக்கு மறைமுகமாக இரண்டு வருடங்களாக டார்ச்சர் செய்து வந்தார் என நயன்தாரா தெரிவித்து அதிர வைத்தார்.

இது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானதாக பார்க்கப்பட்டது.இதனால் தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கு இடையே பெரும் பிரச்சனை மற்றும் எதிரிகளாக இருந்து வருவது அம்பலமானது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை ஆழ்ந்து ஓய்ந்த நிலையில் மீண்டும் நயன்தாரா தனுஷை விடாமல் தற்போது அவரை சீண்டி இருக்கிறார் .
அடுத்தவர் வாழ்க்கை கெடுத்தால்…
தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அதில் கர்மா என்ன சொல்கிறது என்றால் பொய்களை பேசி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் கெடுக்க நினைத்தால் அது அசலும் வட்டியும் ஆக உங்களிடமே மீண்டும் வந்து சேரும் என சூசகமாக தனுஷை தான் திட்டி இருக்கிறார்.

மீண்டும் தனுஷை சீண்டிய நயன்தாரா!
தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை பரபரப்பாக போகவே இதையும் நயன்தாரா தனுஷை தான் தாக்கி பேசி இருக்கிறார் என கூறி வருகிறார்கள். காரணம் தனுஷ் – மற்றும் ஐஸ்வர்யாவுக்கு அண்மையில் தான் விவாகரத்து ஆனது. அதைத்தான் நயன்தாரா இப்படி சொல்கிறார் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

தொடர்ந்து தனுஷ் மௌனம் காத்து வருவது சரியில்லை என தனுஷின் ரசிகர்கள் நயன்தாராவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறார்கள். இது எப்படி போகுமோ தெரியவில்லை. ஆனால் தனுஷ் நயன்தாராவின் பிரச்சனை பெறும் பிரச்சனையாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.