பிசியான நடிகை
நயன்தாரா தற்போது “ராக்காயி”, “டெஸ்ட்” போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் யாஷ், மம்மூட்டி ஆகியோருடன் தலா ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனத்தினத்திடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் நயன்தாரா இழுத்தடிக்கிறாராம்.

டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ்
சமீப காலமாக “யானை”, “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”, “மிஸ் மேகி” போன்ற பல திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனம் டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ். நயன்தாரா நடித்து வரும் “ராக்காயி” திரைப்படத்தையும் இந்நிறுவனமே தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு புதிய திரைப்படத்திற்காக நயன்தாராவிற்கு அட்வான்ஸ் தந்துள்ளதாம் இந்நிறுவனம். ஆனால் நயன்தாரா கால்ஷீட் கொடுக்காமல் பல நாட்களாக இழுத்தடித்துக்கொண்டே வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.