என்னை அப்படி கூப்பிடாதீங்க…
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாரா “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக திகழ்ந்து வந்தார். ஆனால் நேற்று திடீரென அவர் வெளியிட்ட அறிக்கையில் “இனிமேல் என்னை நயன்தாரா என்றே அழையுங்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வரும் வேளையில் நயன்தாரா குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

ஒரு நாள் ஷூட்டிங், ரெண்டு நாள் சம்பளம்…
அதாவது சமீபத்தில் ஒரு பிரபல நகை கடை நிறுவனம் தனது நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவை அணுகியதாம். அந்த நகைக் கடை விளம்பரத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ள நயன்தாரா ஒரு நிபந்தனை போட்டாராம்.
“இரண்டு நாள் படப்பிடிப்பு வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு 4 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். மறுநாள் 4 மணி நேரம் நடிக்கிறேன். இரண்டு நாளுக்கான சம்பளத்தை கொடுத்துவிடுங்கள்” என கூறினாராம். அதற்கு நகை கடை நிறுவனமும் சரி என ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் நயன்தாரா திடீரென “நான் ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்து விடுகிறேன்” என கூறியிருக்கிறார். அதே போல் ஒரே நாளில் நடித்துக்கொடுத்துவிட்டு இரண்டு நாளுக்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டாராம். இதனால் அந்த நகை கடை நிறுவனத்தார் கவலையில் மூழ்கியுள்ளனராம்.