நயன்தாராவின் ஆணவனப்படம்:
நடிகை நயன்தாராவின் ஆவணப்படமான “nayanthara beyond the fairy tale” என்ற வெப் தொடர் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த ஆவணப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
அதை வெளியிடுவதில் தனுஷ் பெரும் தொல்லை கொடுத்து வந்ததாகவும் நானும் விக்னேஷ் சிவனும் காதலித்தபோது நானும் ரவுடிதான் படத்தின் சூட்டிங் போது எடுக்கப்பட்ட எங்களது சந்திப்பின் அழகான நினைவுகளின் வீடியோவை வெளியிடுவதற்கு கிட்டத்தட்ட ரூபாய் 10 கோடி எங்களிடம் பணம் கேட்கிறார்கள் என்று நயன்தாரா தனுஷ் மீது மூன்று பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டை முன்வைத்து கோலிவுட் சினமாவையே அதிரவைத்தார்.
தனுஷ் மீது புகார்:
இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானதாக பார்க்கப்பட்டது. இதனால் நயன்தாரா மற்றும் தனுஷின் விவகாரம் கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில் தற்போது இது குறித்து நயன்தாராவுக்கு சிலர் ஆதரவு கொடுத்தாலும் பலரும் அவரை எதிர்த்து விமர்சனம் செய்து வருகிறார்கள் .
அந்த வகையில் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நயன்தாரா வெளியிட்ட அந்த அறிக்கையில் அப்பா கஸ்தூரிராஜா அண்ணன் செல்வராகவன் அரவணைப்பில் சினிமாவிற்கு வந்தவர் என்று தனுஷை மோசமாக சொல்லி இருக்கிறாரே நயன்தாரா எப்படி சினிமாவுக்கு வந்தாராம்?
மோகன் லால் அரவணைப்பில் நயன்தாரா:
மோகன்லால் அரவணைப்பில் தானே சினிமாவுக்குள் வந்தார். அதற்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு.நான் காட்டவா? ஏனென்றால் மலையாள திரைப்படத்தில் மோகன்லால் சொல்லித்தான் நயன்தாராவுக்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது. இது அங்கு இருக்கும் யாராலும் மறுக்க முடியாது.
அப்போதைய பத்திரிக்கைகளில் கூட இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு தான் நயன்தாரா சினிமாவை விட்டுவிட்டு தமிழ் சினிமாவுக்கு தாவி விட்டார். ஐயா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
குருவை மிஞ்சிய சிஷ்யன்:
இப்படி நயன்தாரா மோகன்லாலின் துணையோடு சினிமாவுக்கு வந்துவிட்டு எப்படி தனுஷை விமர்சனம் செய்ய முடியும்? அப்பா அண்ணனால் தான் தனுஷ் சினிமாவிற்கு வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவரின் திறமை இல்லாமல் இந்த அளவிற்கு உச்சத்தை தொட்டு இருக்க முடியாது. இப்போது தனுஷ் குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகிவிட்டார் என பயில்வான் ரங்கநாதன் தனுஷுக்கு ஆதரவாக பேசியும் நயன்தாராவை கடுமையாக சாடி இருக்கிறார்.