நயன்தாரா:
தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தமிழை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார். ஜவான் திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக பாலிவுட்டில் தடம் பதித்தார் நயன்தாரா.

அங்கு முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்று நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை நயன்தாரா எட்டி பிடித்திருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் அவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ரூ. 30 கோடி வருமானம்:
திருமண வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் பல கோடி பணம் பார்த்திருக்கிறார். குறிப்பாக இந்த விஷயத்தில் தனுஷுக்கு பெரும் தொல்லையாகவும் 10 கோடி கேட்டு தன்னை டார்ச்சர் செய்ததாகவும் நயன்தாரா புகார் தெரிவித்து அதிரடி கிளப்பினார்.

இந்த நிலையில் நயன்தாரா netflixல் தன்னுடைய திருமண வீடியோவை விற்று கிட்டத்தட்ட 20 முதல் 30 கோடி வரை பணம் சம்பாதித்து இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி ஆச்சரியப்படுத்துகிறது. திருமணத்திற்கு ஆன செலவு மொத்தத்தையும் தன்னுடைய வீடியோவை விற்றதன் மூலமாகவே எடுத்து விட்டாரே என நெட்டிசன் எல்லோரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.