சர்ச்சைகள்
லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கோலிவுட்டில் வலம் வரும் நயன்தாரா சமீப காலமாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் இருந்து சமீபத்தில் தனுஷ் விவகாரம் வரை நாம் இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாரா உதவி இயக்குனருடன் சண்டை போட்ட நிகழ்வை குறித்து வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இறைவன்
ஐ.அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா உட்பட பலரது நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “இறைவன்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாரா, “நான் இனிமேல் மதியத்திற்கு பிறகுதான் படப்பிடிப்பில் கலந்துகொவேன். என்னால் காலையில் வரமுடியாது” என்று கூற, அதற்கு அத்திரைப்படத்தின் உதவி இயக்குனர் ஒருவர், “இப்படி சொன்னால் எப்படி மேடம்” என கேட்க, அதற்கு நயன்தாரா, “உனக்கு என்ன தெரியும்? நீ எத்தனை வருஷம் இன்டஸ்ட்ரில இருக்க? நான் எவ்வளவு வருஷம் இன்டஸ்ட்ரில இருக்கேன் தெரியுமா?” என சண்டைக்கு போக அதன் பின் வேறு வழியில்லாமல் படக்குழு ஒப்புக்கொண்டுள்ளது.