அம்மனாக நயன்தாரா
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தின் பட பூஜை இன்று காலை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆன்மிக சாமியார்களில் இருந்து அரசியல்வாதிகள் வரை பலரும் இந்த பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இத்திரைப்படத்தில் நயன்தாரா, சுந்தர் சி ஆகியோருடன் ரெஜினா கஸண்ட்ரா, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனராம். இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ், நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
சொந்த பட பூஜைக்கே இப்படியா?

இன்று காலை விழா தொடங்கிய பிறகு மேடையில் படக்குழுவினர் பலரும் இடம்பெற்றிருக்க நயன்தாரா வெகு நேரமாகியும் வரவில்லையாம். ஆனால் அவர் பூஜை நடக்கும் இடத்திற்கு முன்னதாகவே வந்து தனது கேரவானிற்குள் தங்கியிருந்தாராம். விழா தொடங்கிய பிறகு விழாவை தொகுத்து வழங்கியவர் நயன்தாராவை வரவழைக்க அவரது பெயரை கூறியபோதுதான் அவர் கேரவானில் இருந்து இறங்கி மேடைக்கு வந்தாராம். இவ்வாறு ஒரு தகவல் இணையத்தில் சுற்றி வருகிறது.