தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் .
மலையாள சினிமாவில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். முன்னதாக இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ் சினிமாவில் முதன்முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமான நடிகை நயன்தாரா .
இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார் .
இதனிடையே பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்திருந்தார். அதன் பிறகு அதை எல்லாம் மீண்டு வந்து மீண்டும் திரைப்படங்களில் நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்தை பிடித்தார் .
விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.
இந்நிலையில் தற்போது குழந்தை குடும்பம் கணவர் என பிஸியாக மிகவும் அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாராவின் திருமண வீடியோவின் திருமண ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது .
இதில் நயன்தாரா ஒரு நடிகையாக இந்த திரைத்துறையில் எவ்வளவு எத்தனை படிகள் ஏறி முன்னேறி வந்தார் என்பதையும் மேலும் நயன்தாரா திருமணத்தின்போது மிகவும் எமோஷனலாக கணவர் விக்னேஷ் பற்றி பேசியதும் இந்த ட்ரெய்லரில் அடங்கியிருக்கிறது .
அப்போது நயன்தாரா இந்த உலகத்தில் விக்னேஷ் சிவனை விட என்னை யாரும் கேர் பண்ணி பார்த்ததே கிடையாது .
அவர் அந்த அளவுக்கு லவ் அண்ட் கேரிங்கா இருக்கிறார் எனக்கூறி நயன்தாரா கண்கலங்கி அழுதுள்ள இந்த திருமணம் ட்ரைலர் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.