லேடி சூப்பர் ஸ்டார்
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தற்போது “டெஸ்ட்”, “மண்ணாங்கட்டி” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் “டியர் ஸ்டூடண்ட்ஸ்”, “MMMN” ஆகிய திரைப்படங்களிலும் கன்னடத்தில் “டாக்ஸிக்” என்ற திரைப்படத்திலும் தமிழில் “ராக்காயி” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து “மூக்குத்தி அம்மன் பார்ட் 2” திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

கண்டிஷன் போடும் நயன்தாரா
இந்த நிலையில் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளும்போது தனக்கு தனியாக ஒரு மானிட்டர் வேண்டும் என நயன்தாரா கேட்கிறாராம். ஏற்கனவே இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் பயன்படுத்த ஒரு மானிட்டர் ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திலும் இடம்பெற்றிருக்கும். ஆனால் இனி வரும் காலங்களில் நயன்தாரா, தன்னுடைய மேக்கப் மேன் மற்றும் சிகை அலங்காரம் செய்பவர்கள் பார்ப்பதற்கு என்று தனியாக மானிட்டர் வேண்டும் என கேட்கிறாராம்.