நல்ல நடிகர்தான்… ஆனால்!
“ஆசை ஆசையாய்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமான ஜீவா, அதன் பின் பல முக்கிய வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். இவர் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரியின் மகன்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வந்த ஜீவா, ஒரு கட்டத்திற்குப் பிறகு கதைத் தேர்வில் கொஞ்சம் கவனம் செலுத்தாமல் வரிசையாக பல தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்தார். தற்போது பா.விஜய் இயக்கத்தில் “அகத்தியா” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஜீவாவை கண்டபடி கேட்ட நாசர்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஜீவா, “எனது முதல் படத்தில் நான் நாசருடன் நடித்தபோது அவர் என்னிடம் பேசவே மாட்டார். மற்ற நடிகர்கள் எல்லாரும் நன்றாக பேசுகிறார்கள். ஆனால் நாசர் மட்டும் என்னிடம் சரியாக பேசவில்லை. ஒரு நாள் என்னிடம் ‘உன்னோட வசனங்களை எல்லாம் நீயே பேசிப்பார்த்து ஏன் உன்னை தயார் செய்துகொள்ள மாட்டிக்கிறாய்?’ என கேட்டார். அதற்கு நான் ‘Prompting கொடுப்பார்கள். அதை வைத்து பேசி விடுவேன்’ என்று கூறினேன்.

‘நடிக்க வரனும்மா அப்படியே ஸ்ட்ரைட்டா வந்துடுவீங்களாப்பா?’ என கேட்டார். இதை விட பச்சையாக ஒரு நாள் கேட்டார். “Producer பையன்னா கிளம்பி வந்துடுவீங்களாடா நடிக்குறதுக்கு?” என பச்சையாக கேட்டார்” என்று நாசர் தன்னை கடுமையாக பேசியதை ஜீவா அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.