மூத்த நடிகர்
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாசர். கிட்டத்தட்ட 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நாசர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்க கூடியவராகவும் பலருக்கும் உத்வேகமூட்டும் நடிகராகவும் இருக்கிறார். இவ்வாறு கோலிவுட்டின் மரியாதைக்குரிய மூத்த நடிகராக புகழ்பெற்றிருக்கும் நாசரை குறித்து அவரது சகோதரர் ஜவஹர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மிகவும் வேதனையுடன் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

எங்களை நடுத்தெருவுல விட்டுட்டாரு…
“35 வருடங்களாக எங்களுக்கும் நாசருக்கும் தொடர்பு இல்லை. அவர் மிகப் பெரிய பணக்காரரை போல் பேசுகிறார். ஆனால் எங்கிருந்து வந்தோம் என்பதை மறந்துவிட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நாசரின் குருநாதர் எடுத்த நாசர் இடம்பெற்ற ஒரு புகைப்படத்தை பாலு மகேந்திரா எடுத்ததாக பொய் கூறினார் நாசர். இந்த பொய்யை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

பாலு மகேந்திரா அந்த புகைப்படத்தை எடுத்திருந்தால் ஏன் அவர் பாலு மகேந்திரா படத்தில் நடிக்கவில்லை? பெரிய மனிதர் ஆகிவிட்டால் என்ன வேண்டுமானாலும் தவறுகள் செய்யலாமா? மனசாட்சியே இருக்காதா அவருக்கு?” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நாசர் பணம் குறைவாக சம்பாதித்திருந்தால் குடும்பத்துடன் ஒன்றி இருந்திருப்பார். ஆனால் நிறைய சம்பாதித்தவுடன் அவரது குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டார்” என்று பேசியுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.