மாபெரும் வெற்றி
கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் பேன் இந்திய திரைப்படமாக வெளிவந்த “புஷ்பா” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. வெளியாகி 7 நாட்கள் கூட முடிவடையாத நிலையில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
புஷ்பா படமா? அய்யோ!

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான நசீரூதின் ஷா, கடந்த வருடம் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் “புஷ்பா மற்றும் RRR போன்ற திரைப்படங்களை என்னால் பொறுமையாக அமர்ந்து பார்க்கவே முடியவில்லை. நான் இது போன்ற திரைப்படங்களுக்குச் செல்வதே இல்லை. இதெல்லாம் ஆண்களின் வலிமை என்று கூறப்படும் பொதுபுத்தியினை கொண்டாடும் திரைப்படம்” என கடுமையாக பேசியுள்ளார். “புஷ்பா 2” திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் நடைபோட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இவரது இந்த பேட்டி மீண்டும் இணையத்தில் வைரலாக, அல்லு அர்ஜூன் ரசிகர்கள் கடும்கோபத்தில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.