தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான நெப்போலியன் அவரது மூத்த மகன் தனுஷுக்கு ஜப்பானில் மிகவும் பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் நடத்தப்பட்டிருக்கிறது.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் அக்ஷயா என்ற பெண்ணை நாளை திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார் இதற்காக ஜப்பானில் மிகப்பெரிய சொகுசு கப்பலில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் .
இதற்காக திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் திருமணத்திற்கு படையெடுத்து இருக்கிறார்கள். இந்த திருமணத்தில் நடிகை கலா மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள் .
அப்போது கலா மாஸ்டர் நெப்போலினின் இளைய மகனான குணாலுடன் பேட்டி எடுத்தார். அதாவது அண்ணன் தனுஷுக்கு திருமணம் ஆக இருக்கிறது.
அடுத்ததாக தம்பி குணால் எங்கே எப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாய் என கலாம் மாஸ்டர் கேட்க… அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் நிலவில் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன் என்றார்.
உடனே கலா மாஸ்டர் நிலவில் திருமணம் என்பது முடியுமா? என கேட்க எதிர்காலத்தில் நிச்சயம் செல்ல முடியும் என அவரும் கூறுகிறார் .
இதைக் கேட்ட உடனே கலா மாஸ்டர் நெப்போலியன் சொத்தையே இரண்டு பிள்ளைகள் அழித்து விடுவார்கள் போல இருக்கு என ஓபன் ஆக சொல்லிவிட்டார்.
கலா மாஸ்டர் மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்கு பல நூறு கோடிகள் நெப்போலியன் செலவு செய்து வருகிறார் .
இரண்டாவது மகன் நிலவில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என கூறுகிறார். இரண்டு மகன்களுக்கும் பணத்தின் அருமையே தெரியவில்லை என நெட்டிசன்ஸ் கூறுகிறார்கள்.
செல்வ செழிப்புடன் இருப்பதால் இப்படித்தான் ஜப்பானிலும் நிலவிலும் திருமணம் நடத்த ஆசைப்படுகிறார்கள் என நெட்டிசன்ஸ் பலரும் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகிறார்கள்.