நண்பன் விஜய்…
2012 ஆம் ஆண்டு விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நண்பன்”. இத்திரைப்படம் ஹிந்தியில் ஆமீர் கான் நடித்த “3 இடியட்ஸ்” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். “நண்பன்” திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்த நிலையில் இத்திரைப்படம் விஜய்யின் கெரியரில் வித்தியாசமான ஒரு Feel Good திரைப்படமாக அமைந்தது.

முதலில் இயக்கவிருந்த இயக்குனர்…
“நண்பன்” திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்த நிலையில் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. எனினும் இத்திரைப்படத்தை முதலில் இயக்குனர் பார்த்திபன் இயக்குவதாக இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் பார்த்திபன் இந்த புராஜெக்டில் இருந்து வெளியேறிய பிறகு ஷங்கர் இத்திரைப்படத்தை இயக்கினாராம்.
