நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து:
தெலுங்கு சினிமாவின் பிரபலமான இளம் நடிகராக இருந்து வரும் நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்த பிரிந்து விட்டார் .

அவரை பிரிந்த கையோடு நடிகை சோபிதா துலிபாலாவுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா கடந்த ஆகஸ்ட் 8ம்தேதி பிரமாண்டமான முறையில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் .
ரகசிய காதல் – மறுமணம்:
இதை அடுத்து திருமணம் வருகிற டிசம்பர் 4ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த திருமணம் ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் மிகவும் பிரம்மாண்டமாக 300, 400 பேர் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட இருக்கிறது .

இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நாகார்ஜுனா வீட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாக சைத்தன்யா மற்றும் சோபிதாவின் திருமண வீடியோவை பல கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது .
நெட்பிளிக்ஸில் திருமண வீடியோ:
முன்னதாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்களுக்கு ரூ. 30 கோடி ரூபாய் கொடுத்தது. தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்களுக்கு 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

இதன் மூலம் அவர்கள் மிகப்பெரிய வருமானத்தை இந்த திருமணத்திலேயே சம்பாதித்து விட்டார்கள். திருமணத்திற்கு ஆகும் மொத்த செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கொடுத்த தொகையிலேயே முடித்துவிடுவார்கள் போல என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். இந்த திருமணத்திற்காக டோலிவுட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் சமந்தாவின் ரசிகர்கள் நாக சைதன்யாவுக்கு தொடர்ந்து சாபம் விட்டு வருகிறார்கள்.