நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருப்பவர்…
தமிழ் இசை உலகில் மிக முக்கியமான பாடலாசிரியராக வலம் வந்தவர் நா.முத்துக்குமார். தனது தனித்துவமான கவிதை நடையாலும் தனது மொழி நடையாலும் ரசிகர்களின் மனதுக்குள் புகுந்து ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் வல்லமை படைத்த பாடலாசிரியராக நா.முத்துக்குமார் திகழ்ந்தார்.

குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதவை. துர்திஷ்டவசமாக கடந்த 2016 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்தார் நா.முத்துக்குமார். இந்த நிலையில் நா.முத்துக்குமாரின் மிகப் பெரிய கனவு குறித்த ஒரு தகவலைதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஹாலிவுட்டிற்கு போகணும்…
நா.முத்துக்குமாருக்கு இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவு இருந்ததாம். தமிழிலே ஒரு படம் இயக்கி அதன் பின் பாலிவுட்டில் ஒரு படம் இயக்கி அதன் பிறகு ஹாலிவுட்டில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று அவர் விரும்பினாராம். காஞ்சிபுரத்தை மையமாக வைத்து “சில்க் சிட்டி” என்று ஒரு கதையை எழுதிவைத்திருந்தாராம்.
அதே போல் அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்த அனுபவங்களையும் தொகுத்து ஒரு திரைப்படமாக உருவாக்க வேண்டும் என நினைத்திருந்தாராம். ஆனால் காலம் கடந்துவிட்ட நிலையில் அவரது கனவு அவருடனேயே புதைந்துப்போனதுதான் சோகம்.