சர்ச்சை இயக்குனர்
இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக திகழ்ந்து வருபவர். அவரது திரைப்படபாணிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒருவராகவும் மிஷ்கின் திகழ்ந்து வருகிறார்.

இவர் இயக்கும் திரைப்படங்களில் சர்ச்சைகள் இருக்குமோ இல்லையோ, இவர் மேடையில் பேசத்தொடங்கினாலே சர்ச்சைகள் வெடித்துவிடும். “துப்பாறிவாளன்” திரைப்பட விவகாரத்தில் விஷாலை ஒரு பொது மேடையில் மிக கடுமையான வார்த்தைகளை கூறி விமர்சித்தார் மிஷ்கின். அதனை தொடர்ந்து பல மேடைகளில் சர்ச்சைக்கு பெயர் போனவராக மிஷ்கின் உருமாறியுள்ளார்.
மிஷ்கின் இயக்கிய “பிசாசு 2” திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளிவரவுள்ளது. தற்போது விஜய் சேதுபதியை வைத்து “டிரெயின்” என்ற திரைப்படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார்.
மிஷ்கின் சொன்ன வார்த்தை?
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சைக்கோ”. இத்திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது நித்யா மேனன், மிகவும் தாமதமாக வந்தாராம். “லேட்டாகிடுச்சே” என்ற பதட்டத்தோடு நித்யா மேனன் இருக்க மிஷ்கின் நித்யா மேனனின் நிலையை பார்த்து “உனக்கு Periods தானே” என கேட்டாராம். அதை கேட்டதும் நித்யா மேனன் ஷாக் ஆகிவிட்டாராம். “நாளைக்கு 12 மணிக்கு ஷூட்க்கு வா, போதும்” என கூறினாராம்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மிஷ்கின், “அன்று நித்யா மேனன் ஏன் தாமதமாக வந்தார் என்று எனக்கு அவரை பார்த்தபோதே புரிந்துவிட்டது. எனக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. நானும் திருமணமானவன் தான். என்னால் அதை புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு பெண் எந்த காரணமும் இல்லாமல் தாமதமாக வரமாட்டாள். நமது அம்மா வீட்டுக்கு ஒதுங்கி இருப்பாரே, அது போல் நித்யா மேனன் வீட்டுக்கு ஒதுங்கி இருப்பார் என்று தெரிந்தது” என கூறியுள்ளார்.