எம் எஸ் பாஸ்கர்:
தமிழ் சினிமாவின் பிரபலமான குணசத்திர நடிகரும் டப்பிங் கலைஞருமாக இருந்து வருபவர் தான் எம் எஸ் பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய திரை பயணத்தை துவங்கினார்.எம்எஸ் பாஸ்கர் பின்னர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தொடங்கினார்.

திருமதி ஒரு வெகுமதி என்கிற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய கலை பயணத்தை தொடங்கிய எம்எஸ் பாஸ்கரன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தது பிரபலமான குணசத்திர நடிகராகவும் பார்க்கப்பட்டு வந்தார்.
தேசிய விருது திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரைகளிலும் நாடகம் முதல் பல்வேறு தொடர்களிலும் நடித்து பிரபலமானவராக இருந்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் இருக்கிறார்கள் .
மகள் ஐஸ்வர்யா:

இதில் ஐஸ்வர்யா டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்து பல்வேறு ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இவரது மகன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் .
இந்த நிலையில் இவரது மகளுக்கு அண்மையில் தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தீபாவளி தினத்தன்று பிறந்ததால் தீபாவளி பரிசை கடவுளே எங்களுக்கு கொடுத்து இருக்கிறார் என் எம்.எஸ் பாஸ்கர் நெகழ்ச்சியோடு கூறி இருந்தார்.
தொட்டில் விழா:
மேலும், என்னுடைய தாயே பிறந்து வந்திருக்கிறாள் என்றெல்லாம் எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய பேத்தியால் மிகுந்த எமோஷனல் ஆகி இருந்தார். இந்த நிலையில் எம்எஸ் பாஸ்கரின் பத் திக்கு தொட்டில் விழா குடும்பத்தினர் நடத்தி அழகு பார்த்திருக்கிறார்கள். அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாக எம் எஸ் பாஸ்கரின் வீட்டு இளவரசிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
- About Us
- Contact Us
- Cookie Policy
- Disclaimer
- Latest News
- Privacy Policy
- Subscribe
- Terms & Conditions
- User Policy
Error: Contact form not found.