ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகை
தமிழ் சினிமா வரலாற்றை எடுத்து பார்க்கும்போது ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகையாக திகழ்பவர் கே.பி.சுந்தராம்பாள் என்பவர்தான். இந்த செய்தி சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்த செய்திதான். ஆனால் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகரை குறித்து இப்போது பார்க்கலாம்.

நடிகவேள்
தமிழ் சினிமாவின் கிளாசிக் நடிகராக வலம் வந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா முதன் முதலில் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகராக திகழ்ந்துள்ளார். அவர் நடித்த “ரத்தக்கண்ணீர்” திரைப்படத்திற்காக அவர் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். அதுவும் இத்திரைப்படத்தை தயாரித்த பெருமாள் முதலியாரிடம் “எனக்கு கே.பி.சுந்தராம்பாளை விட பத்தாயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்தால்தான் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் நடிப்பேன்” என்று எம்.ஆர்.ராதா கூறியிருக்கிறார்.

எனினும் பெருமாள் முதலியார் எம்.ஆர்.ராதா கேட்ட அதே சம்பளத்தை கொடுத்து “ரத்தக்கண்ணீர்” திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இத்தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.