மாபெரும் வெற்றி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த “மதகஜராஜா” திரைப்படம் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 12 வருடங்களாக முடங்கிக்கிடந்த இத்திரைப்படம் திடீரென வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் ரசிக்கும்படியான திரைப்படமாக “மதகஜராஜா” அமைந்தது. குறிப்பாக பொங்கல் ரேஸில் முதலிடத்தை பிடித்தது.

மூக்குத்தி அம்மன் 2
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி-என்.ஜே.சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மூக்குத்தி அம்மன்”. இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

“மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். வேல்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் சுந்தர் சி, தற்போது விஷாலை வைத்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறாராம்.
இழுத்தடிக்கும் நயன்தாரா
“மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்திற்கு நயன்தாரா இன்னும் கால்ஷீட் கொடுக்கவில்லையாம். ஆதலால் நயன்தாராவின் கால்ஷீட்டிற்காக காத்திருக்க முடியாது என விஷாலை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம் சுந்தர் சி. இதனால் ”மூக்குத்தி அம்மன் 2” திரைப்படம் Take Off ஆகுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறதாம்.