மூக்குத்தி அம்மன்
நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் 2020 ஆம் ஆண்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படம் உருவாக உள்ளது. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்க வேல்ஸ் நிறுவனமும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இத்திரைப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.

திருவிழா போல் பூஜை..
இந்த நிலையில் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படப் படப்பிடிப்பின் தொடக்க பூஜை வருகிற மார்ச் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் 15 அடியில் ஒரு அம்மன் சிலையை நிறுவி தமிழ்நாட்டில் உள்ள பக்தி பாடகர்களையும் மடாதிபதிகளையும் அழைத்து வந்து ஒரு ஆன்மீக திருவிழாவைப் போல் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தின் பூஜையை நடத்த உள்ளனர். மேலும் மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளதாம்.